Coronavirus Outbreak LIVE Updates: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது - தமிழக அரசு

CoronaVirus | சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்

  • News18
  • | March 09, 2020, 14:18 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    15:43 (IST)
    17:4 (IST)
    தமிழகத்தில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்
    17:3 (IST)

    வாட்ஸ் அப்பில் வதந்தி. இளைஞர் கைது 

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் யாரும் புத்தாநத்தம் செல்ல வேண்டாம் என்று வாட்ஸ் அப்பில் தவறான வதந்தி பரப்பிய நல்லபொன்னம்பட்டியைச் சேர்ந்த
    அழகப்பன் (27) என்பவரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர்.

    15:0 (IST)

    சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அவசர தேவைக்காக செல்பவர்கள் அனுமதி சீட்டுக்காக 5000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10 நபர்களுக்கு அனுமதி சீட்டு காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

    14:17 (IST)

    ஊரடங்கை மீறி வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பவர்கள் 14 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப் படுத்தப்படுவார்கள் -  மத்திய அரசு கடும் எச்சரிக்கை

    11:56 (IST)

    கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் - பிரதமர் மோடி

    11:40 (IST)

    கடுமையான முடிவுகள் ஏழை மக்களை பாதித்துள்ளது என்பதை உணர்கிறேன். மக்கள் அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

    11:37 (IST)

    தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. நாம் நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி

    11:34 (IST)

    மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ50 லட்சம் காப்பீடு அறிவித்திருக்கிறோம். ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றும் வங்கி பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாளர்களை பாராட்டுகிறேன். சமூக இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

    11:26 (IST)

    மக்களை தனிமைப்படுத்துவதே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி; கொரோனாவுக்கு எதிரான போரில், இதைவிட்டால் வேறு வழியில்லை - பிரதமர் மோடி