• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா உயிரிழப்பு சதவிகிதம்: தேசிய அளவில் குஜராத் முதலிடம்..!

கொரோனா உயிரிழப்பு சதவிகிதம்: தேசிய அளவில் குஜராத் முதலிடம்..!

கொரோனா

கொரோனா

நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட கேரளா மாநிலம், இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் சதவிகிதத்தில் தேசிய அளவில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியா முழுவதும் 6 ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 199 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குறிப்பாக, 198 பேர் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் இதுவரை 17 பேர் கொரோனா வைரஸால்  உயிரிழந்திருப்பதால், இறப்பு சதவீதத்தில் 10.1 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் மாநிலம் 7.9 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட கேரளா மாநிலம், இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: