Home /News /coronavirus-latest-news /

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்

 கோப்புப்படம்

கோப்புப்படம்

CoronaVirus | ”முககவசத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்”

  • News18
  • Last Updated :
    கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால், முக கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், முக கவசத்தை யார், யார் அணிய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, பொதுமக்களில் ஏராளமானோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசங்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கவசங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால், முக கவசம், கையுறை, கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை 40 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



    இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணியிடம் கேட்டபோது, வேறு நோய் இருப்பவர்கள், கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே முகக்கவசத்தை அணிந்தால் போதுமானது என்று குறிப்பிட்டார்.

    முககவசத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் வசந்தாமணி கேட்டுக் கொண்டார்.



    முக கவசங்களை தேவையில்லாமல் பொதுமக்கள் வாங்குவதால், சாதாரண மூன்றடுக்கு முக கவசத்தின் விலை ஆறு மடங்கும், N 95 கவசத்தின் விலை மூன்று மடங்கும் உயர்ந்துள்ளது. எனவே, தேவையற்ற பதற்றம் காரணமாக முககவசங்களை வாங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி