சீனாவுக்கு முன்பே இத்தாலியில் கொரோனா? பரபரப்பை ஏற்படுத்திய ஆராய்ச்சிக் கட்டுரை

சீனாவுக்கு முன்பே இத்தாலியில் கொரோனா? பரபரப்பை ஏற்படுத்திய ஆராய்ச்சிக் கட்டுரை
மாதிரிப்படம்
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுதற்கு முன்பாகவே இத்தாலியில் அதன் பாதிப்புகள் தெரிந்ததாக ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து வைரஸ் ஒன்று மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது.

சீனாவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகம் எச்சரிக்கை ஆனது. எனினும், இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணி சிக்கலானது என்பதால், வைரஸ் சீனாவைத்தாண்டி வெளிநாடுகளுக்கும் பரவத்தொடங்கியது.


தற்போது வரை உலகம் முழுவதும் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்பொது வரை, சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைவதாக கூறப்பட்ட நிலையில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பாதிப்பு தொடர்கிறது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவை விட இத்தாலியில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா பரவல் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள Giuseppe Remuzzi என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.Also read... கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!

இத்தாலியில் பரிச்சயமில்லாத நிமோனியா தொற்றுடன் சில நோயாளிகள் சிகிச்சைக்கு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இது கொரோனா அறிகுறிகளை ஒத்து இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Also see...

First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்