• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் 2 பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று...?

தமிழகத்தில் 2 பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று...?

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தாய்லாந்து நாட்டினர் மற்றும் டெல்லி பயணத்தால் மட்டுமே ஈரோட்டில் பலபேருக்கு கொரோனா பரவியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 17 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த 10 பேர் உள்ளனர். இந்த 10 பேரும் 56 முதல் 65 வயதிற்குள் உள்ள ஆண்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இவர்கள் ஏற்கெனவே பெருந்துறை மருத்துமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள்.

    கடந்த மார்ச் 11-ஆம் தேதி டெல்லி வழியாக ஈரோடு வந்த 12-க்கும் அதிகமான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    தாய்லாந்து நாட்டினர் டெல்லியில் நடந்த மாநாடு, ரயில் பயணம், ஈரோட்டில் 10க்கும் அதிகமான இடங்களில் சுற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. தமிழகத்தில் இருந்து 1,500 பேர் அடங்கிய குழு தாய்லாந்து நாட்டினர் பங்கேற்ற டெல்லி மாநாட்டிற்கு சென்றனர், அதில் 981 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.

    அந்த 981 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே தற்போது தொற்று பரவிவருவதாகவும், ஈரோட்டில் பல பேருக்கு தொற்று ஏற்பட டெல்லி பயணமும், தாய்லாந்து நாட்டினரின் தொடர்புமே காரணம் என முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

    கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 42 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லிக்கு பயணம் செய்ததன் அடிப்படையில் இவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்து நாட்டவரிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிவந்த பெண் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

    கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவருக்கும், அவரிடமிருந்து அவரது 10 மாத ஆண் குழந்தை, அவரது தாய், வீட்டு வேலை உதவியாளர் ஆகியோருக்கும் கொரோனா பரவியுள்ளது.

    புதிதாக பாதிக்கப்பட்ட 17 பேரில் சென்னையில் மட்டும் 52 வயது பெண், 76 வயது பெண், 15 வயது சிறுமி, 20 வயது இளைஞர் என 4 பேர் உள்ளனர்.

    அமெரிக்காவில் இருந்து வந்து 42-வது நபராக நோய் தொற்று கண்டறியப்பட்டவருடன், புதிதாக பாதிக்கப்பட்ட 4 பேரும் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை பாரிமுனையைச் சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு தொற்று கண்டறியப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கு பயணம் மூலம் அல்லது தொடர்பில் இருந்தவர்கள் மூலம் பரவியதா என எந்த தகவலும் வெளியாகவில்லை. மதுரையைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    12-ஆவது நோயாளியாக கண்டறியப்பட்டவருடன் அந்த இளைஞரின் குடும்பம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஈரோட்டில் அனுமதிக்கப்பட்ட 2 தாய்லாந்து நாட்டவர்களிடம் இருந்து 25 பேருக்கு தொற்று பரவியுள்ளது.



    தாய்லாந்து நாட்டவர்களுடன் பயணித்த 17 பேர், அவர்களில் ஒருவருக்கு சிகிச்சையளித்த பெண் மருத்துவர், மருத்துவரின் 10 மாத குழந்தை உள்பட குடும்பத்தினர் 4 பேர், மதுரையில் உயிரிழந்த ஒருவர், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மூவர் என்று 25 பேருக்கு அந்த இருவரிடம் தொற்று பரவியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.






    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: