• HOME
 • »
 • NEWS
 • »
 • coronavirus-latest-news
 • »
 • கொரோனாவில் இருந்து விடுதலை... கட்டுப்பாடுகள் இல்லை...! துள்ளல் ஆட்டம் போட்ட நியூஸி. பிரதமர்

கொரோனாவில் இருந்து விடுதலை... கட்டுப்பாடுகள் இல்லை...! துள்ளல் ஆட்டம் போட்ட நியூஸி. பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் கொரோனா கோரப்பிடியில் இருந்து மக்களை மீட்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா உற்சாகக் களிப்பில் நடனம் ஆடியுள்ளார்.

 • Share this:
  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், கிவிதேசம் என்றழைக்கப்படும் எழில்கொஞ்சும் நியூசிலாந்திலும் பிப்ரவரியிலேயே தலைகாட்டியது. அங்கும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து 1,154 பேர் வரை பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.

  மார்ச் 25 ஆம் முதல் நான்கு அடுக்கு ஊரடங்கு அமலானது. வீட்டில் இருந்து மக்கள் வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டார். சமூகப் பரவல் இருந்ததை ஓப்புக்கொண்ட நியூசி அரசு, நோய்த் தொற்றாளர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் வெற்றிகரமாக கண்டறிந்து சிகிச்சை அளித்தது.

  5 வாரங்களுக்குள் வைரஸ் தாக்கம் குறைந்து மூன்றாம் கட்டத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஓட்டல்களில் பார்சல் உணவு பெறவும், சில அத்தியாவசிய தொழில்கள் மீண்டும் செயல்பட அனுமதித்தது. மே மாத வாக்கில் 2ஆம் கட்ட நிலையை எட்டி, கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது.

  அனைத்து தளர்வுகளையும் நீக்க, அதாவது முதல் கட்டத்தை எட்ட ஜூன் 22ஆம் தேதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பான திட்டமிடல் மற்றும் மக்களின் ஓத்துழைப்பால் இரு வாரங்களுக்கு முன்னதாகவே முதலாம் கட்டத்தை நியூசிலாந்து எட்டிவிட்டது. ஆம். அங்கு கடைசி தொற்றாளரும் குணமாகி 17 நாட்கள் ஆன பின்னும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

  இது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா, தொற்றில் இருந்து நாடு முழுவதும் மீண்ட தகவல் கிடைத்ததும் உற்சாகத்தில் குட்டியாக ஒரு துள்ளல் ஆட்டம் போட்டதாக கூறியுள்ளார்.

  நியூசிலாந்து முதல் கட்டத்தை எட்டியுள்ளதால் பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. தனிமனித விலகல் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முக்கியமாக ரக்பி போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இனி எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டால் பிரதமருக்கு மட்டுமா ஆடத்தோன்றும். மக்களுக்கும்தான்.

  மேலும் படிக்க...

  நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது?

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: