கோழி இறைச்சி, முட்டைகளால் கொரோனா வைரஸ் பரவாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கோழி இறைச்சி, முட்டைகளால் கொரோனா வைரஸ் பரவாது - அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • Share this:
கொரோனா தொடர்பாக தமிழக மக்கள் அச்சப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 32 தெரு விளக்குகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ”தமிழக மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமோ பதட்டமோ கொள்ளத் தேவையில்லை. அதே நேரம், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரையில் யாருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை.


கோழி இறைச்சி மற்றும் முட்டைகளினால் கொரோனா வைரஸ் பரவுவதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. இதுபோன்ற காலத்தில் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ”தமிழகத்தில் இதுவரையில் யாருக்கும் கொரானா வைரஸின் பாதிப்பு இல்லை. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுள் 2% பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அது பிற நாடுகளில் 0.2% மட்டுமே உள்ளது. கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம்” என்றார்.

Also see:
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading