முகப்பு /செய்தி /கொரோனா / Corona Vaccine: கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக ஆன்ட்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது: ஆய்வில் தகவல்

Corona Vaccine: கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக ஆன்ட்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது: ஆய்வில் தகவல்

கோவிஷீல்டு

கோவிஷீல்டு

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ்கள் கோவாக்சின் டோஸ்களை விட அதிக ஆன்ட்டிபாடிகளை உற்பத்தி செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய ஹெல்த் கேர் ஒர்க்கர்ஸ் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியான அதே வேளையில் 2 டோஸ்கள் வாக்சின் போட்டுக் கொண்ட பிறகு நோய்த்தொற்று ஊடுருவல் கோவாக்சினைப் பொறுத்தவரை சிறிதளவுதான் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை மேலும் பல நிபுணர்கள் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இந்த ஆய்வின் தகவல்கள் MedrXiv என்ற இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு மருத்துவர்கள் பலரால் சேர்ந்து நடத்தப்பட்டுள்ளது. இதில் வாக்சின் போடப்பட்ட காலக்கட்டத்தில் 6% நபர்களுகு மட்டும்தான் கொரோனா தொற்றியுள்ளது. இரு தடுப்பூசிகளுமே நல்ல தடுப்புத் திறன் கொண்டிருந்தாலும் சிங்கிள் டோஸ் திறனில் இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தடுப்பூசி பற்றாக்குறையினால் சிங்கிள் டோஸ் அதிகம் எடுத்துக் கொண்டுள்ளனர். கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸுக்கான கால இடைவேளி 12 வாரங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 13 மாநிலங்களின் 22 நகரங்களில் மருத்துவப் பணியாளர்கள் 515 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, ஜனவரி முதல் மே மாதம் வரை இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இவர்களது ரத்த மாதிரியில் ஆன்ட்டிபாடிகளின் அளவு பரிசோதிக்கப்பட்டது. மேலும் வைரஸின் ஸ்பைக் புரதம் நோக்கிய ஆன்ட்டி;பாடிகளின் அளவும் பரிசோதிக்கப்பட்டது.

கோவிஷீல்ட் சிங்கிள் டோஸ் வாக்சின் கோவாக்சினைக் காட்டிலும் 10 மடங்கு ஆன்ட்டிபாடிகளை உருவாக்குவதாக தெரியவந்துள்ளது. ஆனால் 2வது ஷாட் தடுப்பூசியில் இரு வாக்சின்களுக்குமான ஆண்ட்டிபாடி உற்பத்தி அளவில் இடைவெளி குறைவே. அதாவது சிங்கிள் டோஸில் 10 மடங்கு அதிக ஆண்ட்டிபாடி என்ற இடைவெளி 2 டோஸ்களில் 6 மடங்கு என்று இடைவெளி குறைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மாறாக கோவிஷீல்ட் நல்ல செரோபாசிட்டிவிட்டி விகிதம் கொண்டுள்ளது, மேலும் சராசரி ஆண்ட்டிபாடி கரைசல் செறிவும் 4 மடங்கு அதிகம்” என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

அதாவது கோவிட் தொற்று ஏற்படாதவர்கள் 2 டோஸ்கள் வாக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 97.8% பேருக்கு ஆண்டிபாடிகள் கண்டுப்பிடிக்கக் கூடிய அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவாக்சின் 2 டோஸ்கள் எடுத்துக் கொண்டவர்களில் 79.3% பேருக்கு ஆண்டிபாடிகள் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஆனால் இன்னொன்றையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் ஆய்வு செய்யப்பட்ட 515 நபர்களில் 90 பேர்தான் கோவாக்சின் எடுத்துக் கொண்டுள்ளனர்.

எந்த வாக்சினும் ஸ்பைக் புரொட்டீனைத்தான் குறிவைக்கும். இந்த வகையில் பார்த்தால் டி-செல் நோய்த்தடுப்பாற்றல் மட்டுமே நீண்ட கால பாதுகாப்பை கொடுக்கும் இந்த ஆய்வில் அது பரிசோதிக்கப்படவில்லை.

ஆண்ட்டிபாடி அளவு காலப்போக்கில் குறைகிறதா என்பதைக் கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.

First published:

Tags: Corona Vaccine, Covaxin, Covid-19 vaccine, Covishield, Sanjeevani