வீடுகளில் முடங்கிய மக்கள்... சமூக வலைதளங்களில் செலவிடும் நேரம் கிடுகிடு உயர்வு...!

வீடுகளில் முடங்கிய மக்கள்... சமூக வலைதளங்களில் செலவிடும் நேரம் கிடுகிடு உயர்வு...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: March 30, 2020, 8:15 PM IST
  • Share this:
ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்கள், நாளொன்றுக்கு 4 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூகவலைதளங்களில் உலாவி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெளியில் சுற்றுவதற்கு கடும் கெடுபிடிகள் இருப்பதால், வீடுகளிலேயே பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வந்தாலும், பெரும்பாலான நேரங்களில் சமூகவலைதளங்களிலேயே உலவி வருகின்றனர்.

குறிப்பாக, ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய கால கட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் மட்டுமே சமூகவலைதளங்களை சராசரியாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது 87 சதவீகிதம் அதிகரித்து, 4 மணி நேரம் சமூக வலைதளங்களில் இணையதள பயன்பாட்டாளர்கள் உலாவி வருவது தெரியவருகிறது.


டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் வசிப்பவர்களிடம் ஹாம்மர் கோப் கன்சூமர் ஸ்னாட்ஷாட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இருந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக, பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதர இணையதளங்களை பயன்படுத்துவோரில் சுமார் 72 சதவீதம் பேர் கொரோனா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவதும் தெரியவந்துள்ளது.

அதேபோல், தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மற்றும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading