இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து உலக நாட்டு தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா தொற்றின் ஆபத்தான அலையை எதிர்த்து போராடும் இந்திய மக்களுக்கு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாள் ஒன்றுக்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையில், மே மாத மத்தியில், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு உச்சத்தை எட்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்த சில வாரங்களில் பெருந்தொற்று பாதிப்பு, மிக மோசமான நிலையை எட்டும் என்றும் ஏச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும், தடுப்பூசி மற்றும் முறையாக மாஸ்க் அணிவதன் மூலம், இந்தியாவில் 70 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து உலக நாட்டு தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்றின் ஆபத்தான அலையை எதிர்த்து போராடும் இந்திய மக்களுக்கு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகள் மற்றும் உலகளவில் தொற்றால் பாதித்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், இந்த சவாலை நாம் எதிர்த்து போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடினமான 2வது அலையை சமாளிக்க இந்தியாவுடன் ஆஸ்திரேலியா துணை நிற்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரீஸன் தெரிவித்திருக்கிறார். இந்தியா எவ்வளவு வலிமையானது, சமாளிக்கும் வல்லமை கொண்டது என்பதை அறிவோம் எனவும் மோரீசன் கூறியுள்ளார். இதற்கிடையே, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில் வைரஸை விட இந்தியா வைரஸ் மிக மோசமானது என்று ஈரான் அதிபர் ஹஸன் ருஹானி தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.