மக்கள் அலட்சியம் காட்டினால்... அதைத் தவிர வேறு வழியில்லை...! முதல்வர் விடுத்த எச்சரிக்கை

மக்கள் அலட்சியம் காட்டினால்... அதைத் தவிர வேறு வழியில்லை...! முதல்வர் விடுத்த எச்சரிக்கை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
  • News18
  • Last Updated: April 3, 2020, 2:05 PM IST
  • Share this:
ஊரடங்கை மக்கள் பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றித்திரிந்தால் 144 தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை செய்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உத்தரவை மீறி வெளியே வருகின்றனர். போலீசாரும் அவர்களை விசாரித்து, தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை குருநானக் கல்லூரியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “பொது மக்கள் வீட்டில் தங்களை தனிமைபடுத்திக்கொள்வது மிகவும் அவசியம். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்றால் 144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக இனி சட்டம் தன் கடமை செய்யும். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை; அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே வராமல், ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு வேறு மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட்கள் வரவேண்டி உள்ளது. விரைவில் வந்து சேரும்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை.கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் தொகை இம்மாதம் இறுதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும். வெளியூரில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் சென்று நிவாரண உதவியை பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading