முகப்பு /செய்தி /கொரோனா / வீட்டில் இருங்கள்...! கடலூரில் சாலையில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம்

வீட்டில் இருங்கள்...! கடலூரில் சாலையில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம்

  • 1-MIN READ
  • Last Updated :

144 தடை உத்தரவு இன்று பன்னிரண்டாவது நாள் நீடிக்கும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது கடலூரில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் காலை முதல் மாலை வரை மக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியே வருகிறார்கள். மக்களுக்காக காவலர்கள் மருத்துவத் துறையினர் துப்புரவு பணியாளர் என அனைவரும் மக்களுக்காக வீதியில் பணியில் உள்ளார்கள். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், வெளியே வருவதை முற்றிலும் தவிர்தது கொரோனா வைரஸை விரட்ட வேண்டும், என்பதை வலியுறுத்தி கடலூர் பாரதி சாலையினை முற்றிலும் முடக்கி சாலை முழுவதும் கொரோனா வைரஸின் படத்தை வரைந்து மற்றும் STAY HOME வார்த்தையையும் எழுதியும் காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் முகம் கொண்ட படத்தை சாலையில் ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வரைந்துள்ளனர் காவலர்கள்,மருத்துவதுறை துப்பரவு பணியாளர்களுக்கு மிகுந்த பாரட்டை பெற்றுள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: CoronaVirus, Cuddalore