• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Coronavirus| தலைவிரித்தாடும் 2-ம் ஆட்டம்; ஒரேநாளில் 72,330 பேருக்கு கொரோனா தொற்று- 459 பேர் மரணம்- 10 முக்கிய அம்சங்கள்

Coronavirus| தலைவிரித்தாடும் 2-ம் ஆட்டம்; ஒரேநாளில் 72,330 பேருக்கு கொரோனா தொற்று- 459 பேர் மரணம்- 10 முக்கிய அம்சங்கள்

 கொரோனா

கொரோனா

இந்தியாவில் கொரொனாவின் 2ம் ஆட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது, ஒரே நாளில் 72,330 பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளது. இதில் பாதிக்கும் மேல், அதாவது 39,544 பேருக்கு மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாகத் தொற்றியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரொனாவின் 2ம் ஆட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது, ஒரே நாளில் 72,330 பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளது. இதில் பாதிக்கும் மேல், அதாவது 39,544 பேருக்கு மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாகத் தொற்றியுள்ளது.

    கொரோனா அப்டேட்ஸ்: 10 முக்கிய அம்சங்கள்

    1. சத்திஸ்கர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,563 கேஸ்கள் நேற்று மட்டும் உருவாகியுள்ளன. கர்நாடகாவிலும் 4,000த்துக்கும் அதிகமான தொற்று பதிவாகியுள்ளன.

    2. கடந்த 24 மணி நேரத்தில் 459 பேர் கோவிட் 19-க்கு இறந்துள்ளனர், இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 1,62,927 ஆக அதிகரித்துள்ளது.

    3. மொத்தம் இந்தியாவில் இதுவரை 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 665 தொற்றுக்கள் இதுவரை பதிவாகியுள்ளன. 459 மரணங்களில் மகாராஷ்டிரா 243 மரணங்கள், பஞ்சாப் 55, சத்திஸ்கர் 39, கர்நாடகா 26, தமிழகம் 19 என்று மரணமடைந்துள்ளனர், குறைந்தது 14 மாநிலங்களில் மரணமில்லை.

    4. மிகப்பெரிய கொரொனா தடுப்பூசித் திட்டத்தின் 3வது கட்டத்துக்கு நாடு இன்று முன்னேறியுள்ளது. 45 வயதானோரு முதலியோருக்கு இன்று தடுப்பூசி போடப்படும் திட்டம் தொடங்குகிறது.

    5. மார்ச் 1ம் தேதி கொரோனா வாக்சின் போடும் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுடைய சீரியஸ் நோயாளிகளுக்கும் தொடங்கப்பட்டது. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தடுப்பூசித் திட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் போடப்பட்டது.

    6. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 39,544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,12,980 ஆக உள்ளது.

    7. கர்நாடகாவில் 4225 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளது. முந்தைய 24 மணி நேரத்தை விட இது 42% அதிகமாகும். மார்ச்சில் பெங்களூருவில் மட்டும் 500 குழந்தைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

    8. குஜராத்தில் 2,360 பேருக்குக் கொரோனா புதிதாகத் தொற்றியுள்ளது.

    9. இதுவரை 6.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 6 கோடியே 43 லட்சத்து 58 ஆயிரத்து 765 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

    10. நேபாள் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: