புதுச்சேரியில் ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று - கிரண் பேடி

ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று - கிரண் பேடி
கோப்புப்படம்
  • Share this:
புதுச்சேரி பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள வீடியோ பதிவில், காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்ட அவரின் அறியாமையால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரியில் மற்றொருவர் வீடு வீடாகச் சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவரைச் சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகிவிட்டார்.

கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் ’4S’ என்ற பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் வழியாக தொடர்பு தடம் அறிந்ததில், அனைவரும் சிறிய மதுபான விருந்துகளிலோ அல்லது சில வீடுகளில் நடந்த சிறிய பொதுவான விருந்துகளிலோ பங்கேற்றது தெரியவந்துள்ளது என்று கிரண்பேடி தெரிவித்தார்.


Also see:

 ஒவ்வொரு தொழிற்சாலையினுடைய மேலாளர்களும் அவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ’4S’ என்ற பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அந்தத் தொழிற்சாலையின் மேலாளர்களைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதைப் பின்பற்றவில்லை எனில் டிஎம் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும் என்றும் கூறிய கிரண்பேடி, ஒரு முகக்கவச தொழிற்சாலையில் மிக அதிகமான கொரோனா பரவலை ஏற்படுத்தியதைப் போல மீண்டும் நடக்கக்கூடாது என்று எச்சரித்தார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading