கொரோனோ தொற்று: பெரம்பலூரில் 800 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைப்பு

800 படுக்கை வசதிகளுடன் கூடி சிறப்பு வார்டுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக 23 இடங்களில் சுமார் 800 படுக்கை வசதிகளுடன் கூடி சிறப்பு வார்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதிலும் 33 நபர்கள் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவனையில் ஏற்கெனவே கொரோனா சிறப்பு வார்டு இயங்கி வருகிறது.

    இந்நிலையில் அதனை தவிர்த்து, துறையூர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் பயிற்சி மையம் உட்பட வட்டார அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது கட்டடங்கள், தனியார் மருத்துவனைகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் என மொத்தம் 23 இடங்களில் சுமார் 800 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனோ தொற்று சிறப்பு வார்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

    செய்தியாளர்: ஆர்.ராஜவேல்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: