இன்று மட்டும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதி - இதுவரை 8 பேருக்கு பாதிப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு இதுவரை  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதி - இதுவரை 8 பேருக்கு பாதிப்பு
கோப்பு படம்
  • Share this:
கடந்த மாதம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து  உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  அதிமுக எம்எல்ஏக்கள் பரமகுடி தொகுதி சதன் பிரபாகர்,  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.Also read... கொரோனா பாசிடிவ் வந்தால் பயம் வேண்டாம் - அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்

சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு - வன்னியரசு

அதே போல திமுக சட்டமன்ற உறுப்பினர்களான ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி ஆர்.டி. அரசு, செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading