இந்தியாவில் கொரோனாக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக உயர்வு...!

இந்தியாவில் கொரோனாக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக உயர்வு...!
மாதிரிப் படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் உயிரிழப்பு 166-ஐ தொட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 284 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 853 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5734-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 150 பேர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டதால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 18-ஆக உயர்ந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. டெல்லியில் 576 பேர், தெலங்கானாவில் 427 பேர், கேரளாவில் 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா சிகிச்சைக்கு பிறகு 472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 166-ஐ தொட்டுள்ளது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading