சீனாவின் ஊஹானிலிருந்து அழைத்துவரப்படும் 112 இந்தியர்கள்!

சீனாவின் ஊஹானிலிருந்து அழைத்துவரப்படும் 112 இந்தியர்கள்!
சீனாவின் ஊஹானிலிருந்து அழைத்துவரப்படும் 112 இந்தியர்கள்
  • News18 Tamil
  • Last Updated: February 27, 2020, 10:49 AM IST
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான ஊஹான் பகுதியிலிருந்து இந்தியர்கள் உள்ளிட்ட 112 பேர் இன்று அழைத்துவரப்படுகின்றனர்.

சீனாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 2,771 பேர் உயிரிழந்தனர். நோய் தீவிரமாக பரவிவரும் ஊஹான் நகரிலிருந்து 647 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

மீதமுள்ள நபர்களை அழைத்துவருவதற்காக விமானப்படையின் குளோப்மாஸ்டர் சி-17 என்ற விமானத்தை அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சீன அரசிடமிருந்து அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்த விமானம் ஊஹானுக்கு நேற்று சென்று சேர்ந்தது. அதில், 15 டன் அளவுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.


Also see...தாகத்தால் தவித்த நாய்க்கு இரு கைகளை குவளையாக மாற்றிய முதியவர்!

இந்தப் பொருட்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, 112 பேரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 76 இந்தியர்களும், வங்கதேசத்தவர்கள் 23 பேரும் பயணம் மேற்கொள்கின்றனர். இதேபோல, சீனா, மியான்மர், மாலத்தீவு, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்கின்றனர்.

நேற்று நள்ளிரவு புறப்பட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு டெல்லிக்கு வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசிநேர பரிசோதனைகள் காரணமாக, விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த விமானம் இன்று வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழைத்து வரப்படுபவர்களை தங்கவைப்பதற்காக டெல்லியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை முகாமில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Also see...கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading