கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர்... தனிமைப்படுத்தப்பட்ட 40,000 பேர்... பஞ்சாபில் அரங்கேறிய பரிதாபம்...!

கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர்... தனிமைப்படுத்தப்பட்ட 40,000 பேர்... பஞ்சாபில் அரங்கேறிய பரிதாபம்...!
கோப்பு படம்
  • Share this:
பஞ்சாபில் கொரோனா வைரஸ் பாதித்த ஒரே ஒருவரால் 20 கிராமங்களில் 40,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

பஞ்சாபில் 70 வயது முதியவர் இறப்பிற்கு பின்பே அவர் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது கண்டறியப்பட்டது. மதப்போதகரான அவர் இத்தாலி மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய அவர் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனை புறகணித்துள்ளார் என்று பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பால்தேவ் சிங் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் இறப்பதற்கு முன் சீக்கிய பண்டிகை ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஆறு நாட்கள் நடந்த அந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர்.


பால்தேவ் சிங் இறந்த ஒரு வாரத்திற்கு பின் அவரது குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இதுவரை பால்தேவ் சிங் உடன் நேரடி தொடர்பு வைத்திருந்த 550 பேரை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அவர் தங்கியிருந்த இடத்தை சுற்றியுள்ள 15 கிராமங்களுக்கு நாங்கள் சீல் வைத்துள்ளோம்“ என்று மூத்த அதிகாரி ஒருவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 834 பேருக்க கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் 35 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading