Coronavirus | 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்  உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வழக்கம் போல அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வந்தாலும் 17 மாவட்டங்களில் நேற்றைய தொற்று எண்ணிக்கை விட இன்று அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்  உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 199 பெயருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 74 பேருக்கு கூடுதலாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதே  போன்று திருச்சியில் நேற்று 170 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 205 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் நேற்று 48 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இன்று அந்த எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... மருத்துவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்.. மருத்துவர் சைமனின் மகள் மருத்துவர்கள் தினத்தில் வேண்டுகோள்..

தூத்துக்குடியின் பாதிப்பு 59 லிருந்து 75 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் திருப்பத்தூர் சிவகங்கை பெரம்பலூர் கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பத்துக்கும் குறைவாகவே கூடுதல் புதிய தோற்று எண்ணிக்கை இருக்கிறது.
100க்கும் குறைவான புதிய தொற்று பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை நேற்று 25 ஆக இருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது.

தர்மபுரி  - 105. 114

திண்டுக்கல்   -  37-54

கள்ளக்குறிச்சி - 99.   115

கிருஷ்ணகிரி -  98.   109

மயிலாடுதுறை - 37.   44

நாகை -   32.   45

நீலகிரி  -    75.    87

பெரம்பலூர் - 20.    22

சிவகங்கை -  61.    65

திருப்பத்தூர் -    27.    31

திருவள்ளூர் -     104.  105

திருவண்ணாமலை - 125 .199

திருவரூர் -  49.    71

தூத்துக்குடி - 59.    75

திருச்சி - 170.  205

விழுப்புரம் - 52.    65

விருதுநகர் -   48.    72

 
Published by:Vaijayanthi S
First published: