• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் இந்த 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகம்

சென்னையில் இந்த 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகம்

சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 20 வார்டுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் கண்டறியப்படும் புதிய தொற்றாளர்களில் சுமார்  40% சென்னையில் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையிலும் பாதிப்பு பரவலாக இல்லை. சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் உள்ளன. சென்னையில் 23ம் தேதி வரை 3441 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அதில் 800 பேர் 20 வார்டுகளில் மட்டும் உள்ளனர்.

அண்ணா நகர் மண்டலத்தில் வார்டு 99, 104, 100, 95 ஆகிய நான்கு வார்டுகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் வார்டுகள்128  129, 130, 135, ஆகிய நான்கு வார்டுகள், தேனாம்பேட்டை மண்டலம் வார்டுகள் 116, 118 123,  ஆகிய மூன்று வார்டுகள், திருவிக நகர் மண்டலத்தில் 64, 65, 66ஆகிய மூன்று வார்டுகள். ராயபுரம் மண்டலத்தில் 58, 61 ஆகிய இரண்டு வார்டுகள், அம்பத்தூர் மண்டலத்தில் 79, 80, ஆகிய இரண்டு வார்டுகள், ஆலந்தூர் மண்டலத்தில் 167வது வார்டு, அடையாறு மண்டலத்தில் 177 வது வார்டு ஆகிய 20 வார்டுகளில் தான் சென்னையில் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களிலேயே அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 427 பேர்,  அண்ணா நகர் மண்டலத்தில் 374 பேர் , கோடம்பாக்கம் மண்டலத்தில் 372 பேர், திருவிக நகர் மண்டலத்தில் 330 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளில் 18.89 சதவீதம் பேர் 50 வயது 59 வயது வரையிலானவர்கள் , 18.36 சதவீதம் பேர் 40 முதல் 49 வயதிலனவர்கள், 17.96 சதவீதம 30 முதல் 39 வயதிலானவர்கள் ஆவர். 1.24% பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: