200-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு...! சென்னை அப்டேட்

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ள நிலையில், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.

 • Share this:
  சென்னை மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 3859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  அடுத்தபடியாக தண்டையாபேட்டையில் 2835 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500ஐ கடந்துள்ளது. கோடம்பாக்கத்திலும் 2418 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  திரு.வி.க.நகர், அண்ணா நகர், அடையாறு மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11,030 பேர் குணமடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

  Also read... கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக 30 ரீசஸ் குரங்குகளைப் பிடிக்க அனுமதித்தது மஹாராஷ்ட்ர அரசு


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Also see...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: