corona in India update |கொரோனா பாதித்தவரிடமிருந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்ததால் 17 பேருக்கு கொரோனா பரவிய கொடுமை

corona in India update |கொரோனா பாதித்தவரிடமிருந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்ததால் 17 பேருக்கு கொரோனா பரவிய கொடுமை

சிகரெட்டினால் பரவிய கொரோனா.

சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்ற போது, அங்கு தனக்கு நன்கு தெரிந்த ஒருவர் வந்துள்ளார். அவர் அடிக்கடி லேசாக இருமி யுள்ளார். அவரிடமிருந்து, புகைந்து கொண்டிருந்த சிக ரெட்டை வாங்கி, தன்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்துள்ளார்

  • Share this:
    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மூலம் 17 பேருக்குத் தொற்று பரவ சிகரெட் ஒன்று காரணமாகியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இவர் பணிபுரியும் நிறுவனத்தில் மேலும் 17 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதற்கு யார் காரணமென நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஊழியர்களை விசாரித்தனர். அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் மார்க்கெட்டிங் மேனேஜரால்தான் எங்களுக்கு கொரோனா வந்தது என கூறினர்.

    இதனையடுத்து கொரோனா தொற்றியது எப்படி என்று மார்க்கெட்டிங் மேனேஜரை நிர்வாகம் யோசிக்கப் பணித்தது.

    சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்ற போது, அங்கு தனக்கு நன்கு தெரிந்த ஒருவர் வந்துள்ளார். அவர் அடிக்கடி லேசாக இருமி யுள்ளார்.

    அவரிடமிருந்து, புகைந்து கொண்டிருந்த சிக ரெட்டை வாங்கி, தன்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்துள்ளார் மார்க்கெட்டிங் மேனேஜர். அப்போது அவருக்கு கரோனா தொற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஒரு சிகரெட்டை மற்றொரு நபரிடமிருந்து வாங்கி பற்ற வைத்ததால்தான் தனக்கு கரோனா வந்தது என்பதை அறிந்த மேனேஜர், இது குறித்து தன்னுடன் நெருங்கி பழகிய 17 நண்பர்களிடமும் மன்னிப்பு கோரினார்.

    ஒரே நபரிடமிருந்து 17 பேருக்கு கரோனா தொற்று பரவிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    புகைப்பிடித்தல் கொரோனா தொற்று வாய்ப்பை அதிகரிக்கும் மேலும் கொரோனா தொற்றினால் பழுதடையும் நுரையீரல் புகைப்பழக்கம் உள்ளவர்களை சீரியஸ் கேஸ் என்ற நிலைக்குத் தள்ளுவது பற்றி பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. புகைப்பழக்கத்தையே ஒழித்துக் கட்ட வேண்டிய நேரத்தில் இன்னொருவரிடமிருந்து சிகரெட்டை பற்ற வைக்க வாங்குவது அதி ஆபத்து என்பதை இந்தச் சம்பவம் நமக்கு அறிவுறுத்துகிறது.

    அதே போல் மது அருந்துவது கொரோனாவைத் தடுக்கும் உள்ளிட்ட பல கட்டுக்கதைகள் உலவி வருகின்றன, மதுவுக்கு எதிராகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை கவனத்தில் கொள்வது அவசியம்.
    Published by:Muthukumar
    First published: