• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சவூதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று..!

சவூதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று..!

அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று

அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று

சவூதி அரேபியாவில் சுமார் 3000 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

  • Share this:
    சவூதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மன்னரும், பட்டத்து இளவசரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    சவூதி அரேபியாவில் சுமார் 3000 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    அரச குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கும் கிங் ஃபைசால் சிறப்பு மருத்துவமனையில் மேலும் 500 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 84 வயதான மன்னர் சல்மான், ஜெட்டா அருகே உள்ள தீவு மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், செங்கடல் அருகே உள்ள தொலைதூரப்பகுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: