ஜெர்மனியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.8 லட்சம் வரை அபராதம்!
ஜெர்மனியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.8 லட்சம் வரை அபராதம்!
கோப்பு படம்
முகக்கவச வரி சட்டத்தையும் அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி பொது இடங்களுக்கு வருவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது.
ஜெர்மனியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அதிகபட்சமாக எட்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியில் 25 முதல் 10 ஆயிரம் யூரோ வரையில் அபராதம் விதிக்க பல்வேறு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. முகக்கவசம் அணியாத பணியாளர்கள் பணிபுரியும் கடைகளுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கணிசமான தொகையை அபராதமாக விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகக்கவச வரி சட்டத்தையும் அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தின்படி பொது இடங்களுக்கு வருவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது. இல்லாதபட்சத்தில் துணி அல்லது கைக்குட்டைகள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.