கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

Coronavirus | "அடுத்த சில நாட்களில் இது மேலும் குறையும் எனவும் சொல்லப்படுகிறது"

கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!
Coronavirus | "அடுத்த சில நாட்களில் இது மேலும் குறையும் எனவும் சொல்லப்படுகிறது"
  • News18
  • Last Updated: March 10, 2020, 6:15 PM IST
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான கட்டணம் கணிசமாக குறைந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களிலும் விமான பயணத்தை தவிர்க்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான பயணத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.
சென்னையில் இருந்து இதுவரை 10 வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு விமான சேவையிலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு விமான கட்டணம் கணிசமாக குறைந்திருக்கிறது.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.1000க்கும் குறைந்திருக்கிறது. வழக்கமாக கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் தற்போது டிக்கெட் கட்டணம் ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.இதேபோல் டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான கட்டணமும் கணிசமாக குறைந்திருக்கிறது. தற்போது சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1200 ஆகவும், டெல்லி விமான கட்டணம் ரூ.3000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும் உள்ளது.

அடுத்த சில நாட்களில் இது மேலும் குறையும் எனவும் சொல்லப்படுகிறது. வழக்கமாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு இறுதி நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்தால், ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் பல மடங்கு டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சத்தால் டிக்கெட் விலை குறைந்துள்ள நிலையில், விமானப் பயணம் செய்ய ஆசை உள்ளவர்கள் விரைவில் அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று இணையத்தில் பல கிண்டலான கருத்துக்களை பார்க்க முடிகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading