மத்திய அரசின் கொரோனா நிவாரணம்... யாருக்கு எவ்வளவு...?

மத்திய அரசின் கொரோனா நிவாரணம்... யாருக்கு எவ்வளவு...?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: March 30, 2020, 7:27 PM IST
  • Share this:
கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைத் தொகுப்பு எவருக்கு பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின்படி வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் இலவச அரிசி திட்டம் அமலில் உள்ளதால் இது பெரிய அளவில் வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகமே.


மத்திய அரசின் உதவித்தொகை, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் விதிமுறைகள் பொருந்தக் கூடியவர்களுக்கே கிடைக்கும். தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சம் அரிசி கார்டுகள் உள்ளன. இவற்றில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வரும் ஒரு கோடியே 11 லட்சம் கார்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். அதாவது 6 கோடியே 70 லட்சம் பயனாளிகளில் 3 கோடியே 65 லட்சம் பேர் மட்டுமே மத்திய அரசு அறிவிப்பின் கீழ் பயன்பெறுவர்.

இதுபோல் மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் கிடைக்காது. மத்திய அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டம், விதவையர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனடைவோருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.

தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மொத்தம் 32 லட்சம் பயனாளிகள் உள்ளனர். அவர்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் 20 லட்சம் பேருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.எஞ்சியுள்ள, 12 லட்சம் மாநிலத் திட்டப் பயனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள தொகை கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கார்டுதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading