சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதன் மையப்புள்ளியான ஊஹானில் இருந்து மேலும் 100 இந்தியர்களை அழைத்துவர போர் விமானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. சீனாவில் COVID 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,118 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 394 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,576 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதன் மையப்புள்ளியான ஊஹானில் இருந்து மேலும் 100 இந்தியர்களை அழைத்துவர போர் விமானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருந்து பொருட்களும் அந்த விமானத்தில் அனுப்பப்பட உள்ளன. ஏற்கெனவே இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்த 640 பேர் இரு வாரங்களுக்கு முன்பு இரு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.