• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு விலக்கு... ஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்...!

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு விலக்கு... ஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்...!

கோப்புப்படம் (Reuters)

கோப்புப்படம் (Reuters)

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு என்று போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கி விட்டன. 

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து 16 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் அங்குள்ள பல நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதித்திருந்த ஊரடங்கை தளர்த்தத் தொடங்கியிருக்கின்றன.

    8 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள பிரான்சில் தொடக்கப் பள்ளிகள் குறைந்த அளவிலான மாணவர்களுடன் திறக்கப்பட்டுள்ளன. ஜவுளி, புத்தகக் கடைகள், சலூன் கடைகளும் மீண்டும் செயல்படுகின்றன. உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், பார்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதிச் சீட்டு இன்றி 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பெல்ஜியத்திலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. நெதர்லாந்தில் தொடக்கப் பள்ளிகள், நூலகங்கள், சலூன்கள், ஓட்டுநர் பயிற்சி மையங்களை திறக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

    சுவிட்சர்லாந்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள், புத்தக நிலையங்கள், அருங்காட்சியகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயினில் பொது இடங்களில் அதிபட்சமாக 10 பேர் கூடிக் கொள்ளும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளபோதும், உள்ளே குறைந்த எண்ணிக்கையிலேயே வழிபாட்டிற்கு ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இங்கிலாந்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்க முடியாவிட்டால் வரும் புதன்கிழமை முதல் வேலைக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்குச் செல்லவும், சூரியக் குளியல் எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் பொதுப்போக்குவரத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு பகுதியில் உள்ளவரை சந்திக்க நினைத்தால் பூங்காவில் 2 மீட்டர் இடைவெளியில் சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

    இதேபோல், டென்மார்க்கிலும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இனியும் பெரிய அளவில் கொரோனா பரவாது என எதிர்பார்க்கப்படுவதாலும் ஐரோப்பியா நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: