• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தையும் ஆட்டிவைக்கும் கொரோனோ வைரஸ்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தையும் ஆட்டிவைக்கும் கொரோனோ வைரஸ்

இஸ்ரோ

இஸ்ரோ

கொரோனோ வைரஸ் பரவல், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் இஸ்ரோவின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
இந்திய விண்வெளி ஆராய்சிக் கழகம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி ஆராயும் ககன்யான் திட்டத்தை 2022ம் ஆண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக விண்வெளிக்குச் செல்ல நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னோட்டமாக இரண்டு முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி சோதனை செய்யவும் இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதில் மனித ரோபோவை அனுப்பவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதன் முதல் ஆளில்லா விண்கலம் இந்தாண்டு இறுதியில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனோ வைரஸ் பரவல், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தத் திட்டத்தை ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Also see:

மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவுக்குச் செல்லவிருந்த சந்திரயான்-3 திட்டமும் ஆறு மாத காலம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்குச் செல்லும்  வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆளில்லா விண்கலத்தை தொடர்ந்து 2022 திட்டமிடப்பட்டிருந்த ககன்யான் திட்டமும் ஒத்திவைக்கவே அதிக வாய்ப்புள்ளது.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: