அமெரிக்காவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடும் - ஆய்வில் தகவல்

நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை இதுவரை கணித்திராத அளவிற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடும் - ஆய்வில் தகவல்
மாதிரி படம்
  • Share this:
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில், ஒருபுறம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் பல மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் ஒருபங்கு பாதிப்பைச் சந்தித்துள்ள நியூயார்க்கிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அரசுக்கு அளித்துள்ள அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


தற்போது அமெரிக்காவில் 12 லட்சத்து 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் தினந்தோறும் சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதுடன், சராசரியாக 2000 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

Also read: மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் - டிடிவி தினகரன்

அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மே மாத இறுதி தொடங்கி அமெரிக்காவில் தினந்தோறும் 3000 பேர் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், ஒவ்வொரு நாளும் புதிதாக இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 8 மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரத்திற்கு முன், அமெரிக்காவில் 60,000 முதல் 70,000 பேர் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயரும் என்று கூறிய அவர், ஞாயிற்றுக்கிழமை அன்று, உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடக்கக்கூடும் என்று கூறினார்.

இந்நிலையில், நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை இதுவரை கணித்திராத அளவிற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










Also see:
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading