• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 39 பேர் குணமடைந்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 834 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பு 41 ஆகியுள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 39 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 241 பேரும், தமிழகத்தில் 234 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: