உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு உயிரிழப்பு 27 ஆயிரத்தை கடந்தது...!

உலகளவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,182 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு உயிரிழப்பு 27 ஆயிரத்தை கடந்தது...!
கோப்புப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.

உலகளவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,182 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 17,133 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,000 அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 400 பேர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது.


இத்தாலியில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 919 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 9,134 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 773 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 65,719 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபிரான்ஸில் 32,964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1,995 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 299 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.ஈரானில் 32,332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் இதுவரை 81,394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,295 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் நேற்று 3 பேர் மட்டுமே புதிதாக உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading