கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது...!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது...!
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் நாளை சீனாவின் ஊஹான் நகருக்கு செல்கிறது.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. கடைசியாக கிடைத்த தகவலின்படி 2,007 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 75, 138 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 13, 332 பேர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள 3, 700 பேரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 456 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளதால் அதற்கான மாற்று மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் அதற்கான ஆயத்தப் பணியில் மும்முரமாக உள்ளன.


இந்நிலையில், கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவத்தின் C-17 விமானம் நாளை சீனாவின் ஊஹான் நகருக்கு செல்கிறது. மேலும், சீனாவில் இருந்து இந்திய விமானம் திரும்பி வரும்போது, இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்கள் இடவசதியை பொறுத்து அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்காக முன்கூட்டியே இந்திய தூதரகத்தில் முன்பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading