கொரோனா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600 ஆக உயர்வு

கொரோனா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600 ஆக உயர்வு
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்ட உலகம் முழுவதும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியாக நாளை முதல் சாலைகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று சீன அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சீன கரன்சி நோட்டுகளை சீன அரசு திரும்பப்பெற்று, பெரும்பாலானவற்றை புறஊதாகதிர்களை வைத்து சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.


இந்நிலையில், சீனாவிலிருந்து வந்திருந்த பிரான்ஸைச் சேர்ந்த முதியவர், பாரிஸில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன்மூலம், ஆசியாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவரது மகளும் கரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading