Home /News /coronavirus-latest-news /

Fact Check | ஒன்றுகூடி கைத்தட்டினால் கொரோனா வைரஸ் அழியுமா...?

Fact Check | ஒன்றுகூடி கைத்தட்டினால் கொரோனா வைரஸ் அழியுமா...?

 • News18
 • Last Updated :


  நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.

  தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறையும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

  இதற்டையே, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. நேற்றுவரை, கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

  மஹாராஷ்டிராவில் ஒருவர், டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்திருந்தனர். ஜெய்ப்பூரில் உயிரிழந்தவர் இத்தாலி நாட்டவராவார். இந்த நிலையில், நேற்றிரவு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  மேலும், பீகார் மாநிலம் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 38 வயதான ஒருவரும், சிறுநீரகம் செயலிழந்ததால் உயிரிழந்தார்.

  இரு நாட்களுக்கு முன்னர் கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, இன்று முழு ஊரடங்கிற்கு ஆதரவு தர கேட்டுக்கொண்டார். ”காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அடுத்த சில வாரங்கள் மக்கள் முழு ஒத்துழைப்பு  தர வேண்டும். இது கொரோனா வைரசுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.

  அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம். மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவது மிக முக்கியம். மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப்பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள்” என்று கூறியிருந்தார்.

  ஆனால், பிரதமர் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்த விஷயம் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக பரவியது. அதாவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே. மக்கள் வெளியே வரவில்லை என்றால், வைரஸின் சங்கிலி உடைபட்டு, கொரோனா இல்லாத நிலை ஏற்படும்” என்று வதந்திகள் பரவின.  இந்த தகவல்களை பல பிரபலங்கள் வீடியோவாக வெளியிட்டனர். இதனால், ரஜினிகாந்த், பவன் கல்யான் ஆகிரோரது ட்வீட்களை, ட்விட்டர் நீக்கியது.உண்மை என்னவென்றால், கொரோனா வைரஸ் அது இருக்கும் இடத்திற்கு ஏற்ப ஆயுட்காலத்துடன் இருக்கும். வெற்றுவெளியில் 3 மணி நேரம் வரை இருக்கும். அட்டை பொருட்களின் மீது 24 மணி நேரம் வாழக்கூடியவை. பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்புறங்களில் 2 முதல் 3 நாள்கள் வரை வாழக்கூடியவை. கண்ணாடி மீது 96 மணி நேரங்கள் உயிருடன் இருக்க கூடியவை.

  படிக்க... கொரோனா வைரஸ்... எந்தெந்த பொருட்களில் எத்தனை நாட்கள் உயிர்வாழும்...?


  மேலும், பிரதமர் மோடி கைத்தட்டச் சொன்னது, இந்த இக்கட்டான நேரத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்காக. ஆனாலும், இதுவும் திரித்து பரப்பப்பட்டது.

  அதாவது, நாட்டு மக்கள் அனைவரும் கைத்தட்டும்போது, வைப்ரேஷன் ஒன்று உருவாகும். வரும் 24-ம் தேதி அமாவாசை என்பதால், இருள் அதிகமாக இருக்கும். இந்த பாஸிட்டிவ் வைப்ரேஷன், வைரஸ், தீய சக்திகளை அழிக்கும் வல்லமை கொண்டது என்று அறிவியலுக்கு ஒவ்வாத தகவல்கள் பரப்பப்பட்டன.

  உச்சகட்டமாக சில செய்தி நாளிதழே இதனை, செய்தியாக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையமே மேற்கண்ட தகவலை மறுத்துள்ளது.

  கைத்தட்டுவதால் ஏற்படும் வைப்ரேசன்கள் கொரோனா வைரஸை அழிக்காது. கைத்தட்டச் சொன்னது மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களை பாராட்டவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also See. ரயில்களில் பயணித்தவர்களுக்கு கொரோனா... நாடு முழுவதும் சேவையை நிறுத்த திட்டம்...!

  கொரோனா அச்சுறுத்தலால் விஜயகாந்த் வீட்டிலேயே நடந்த தேமுதிக நிர்வாகியின் குடும்ப திருமணம்...!
  மாலை 5 மணிக்கு அனைவரும் கைத்தட்டுங்கள்... அன்பின் ஒலியாக எதிரொலிக்கட்டும்...


  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Published by:Sankar
  First published:

  Tags: CoronaVirus

  அடுத்த செய்தி