கொரோனா வைரஸால் 1110-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் 1110-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,110-ஐ தாண்டியது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 42,364 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதலை கண்டறியும் உபகரணங்கள், சீனாவில் பற்றாக்குறையாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீன அரசு அறிவித்துள்ளதை விட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,110-ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக விளங்கும் ஹுபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஜப்பானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சொகுசுக் கப்பலில் இருந்து தரையிறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தக் கப்பலில் உள்ள 3, 700 பேரில், 135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில், மேலும் 39 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கப்பலில் இந்தியர்கள் 168 பேர் உள்ள நிலையில், அதில் 6 தமிழர்களும் கப்பலில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading