கொரோனா தொற்று தடுப்புக்கு கண்டுபிடித்த கரைசலை சுயசோதனைக்காக உட்கொண்ட தமிழகத்தின் பிரபலமான நிறுவனத்தின் மேலாளரும், மருந்து வல்லுநருமான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்ன?
ஷாம்பூவை தொண்ணுாறுகளில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது சுஜாதா பயோ டெக் நிறுவனம். அதேபோல், இருமல் மருந்து, நினைவாற்றல் மருந்து உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து விநியோகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் புதிய முயற்சியான இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கும் மருந்தின் சோதனைக்காக உட்கொண்ட மாத்திரை அந்த நிறுவனத்தின் மேலாளரின் உயிரை பலிவாங்கியுள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் 47 வயதான மருந்து வல்லுநர் சிவநேசன். கடந்த 27 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள மருந்து ஆராய்ச்சி நிறுவனமான சுஜாதா பயோடெக் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக, சுஜாதா பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரும், மருத்துவருமான ராஜ்குமாரின் தியாகராய நகர் வீட்டில் தங்கியுள்ளார்.
இருவரும் மேற்படி நிறுவனத்திற்கு பல ஆய்வுகளை செய்துள்ளார். வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் சமையல் அறையை ஆய்வுக்கூடமாக்கி சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆய்வில், வெடி பொருட்கள் தயாரிக்கவும் இறைச்சி, பொருட்களை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படும் சோடியம் நைட்ரேட் உடன் சில மூலக்கூறுகளைச் சேர்த்தால் அதன் மூலம் கிடைக்கும் கரைசல் ரத்த உற்பத்தியைப் பெருக்கும் என்று இருவரும் நம்பியதாக கூறப்படுகிறது.
சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும், அதை மருந்தாக மாற்றினால், பெரிய லெவலுக்கு வந்துவிடலாம் என நினைத்து சோடியம் ஹைட்ரேட் கரைசலை இருவரும் குடித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
எந்த பாதுகாப்பு முறையையும் பின்பற்றாமல், அனுமதியும் பெறாமல் இருவரும் சுயமாக சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. சோடியம் ஹைட்ரேட் கரைசலை குடித்ததில், இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சிவநேசனும், ராஜ்குமாரும் மயங்கி விழுந்துள்ளனர். சத்தம் கேட்ட ராஜ்குமார் குடும்பத்தினர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக, சிவநேசன் உயிரிழந்தாக மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர். ராஜ்குமார் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் ராஜ்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர் ராஜ்குமாருக்கும் சிவநேசனும் சேர்ந்து கண்டுபிடித்த கரைசல் என்ன வகை? அதை சோதனை செய்ய அனுமதி பெற்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவநேசன் உயிரிழந்தது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், இது தொடர்பான நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகிறனர்.
மூலிகை மருந்துகளை உட்கொண்டு பரிசோதனை செய்வதுபோல், மிக அஜாக்கிரதையாக ரசாயனங்களை சுயமாக பரிசோதனை செய்ததே சிவநேசன் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.