கொரோனா வைரஸ்: கேரளா செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் சென்னையில் சாமி தரிசனம்

"சபரிமலை தேவசம் போர்டின் அறிவிப்பையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டனர்"

கொரோனா வைரஸ்: கேரளா செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் சென்னையில் சாமி தரிசனம்
"சபரிமலை தேவசம் போர்டின் அறிவிப்பையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டனர்"
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கேரளா செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் பாதிப்பு தொடங்கியுள்ளது. இந்த சூழலில் கேரளா சபரிமலைக்கு செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு செல்லாமல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் விரதத்தை முடித்து 18 படி ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜைக்காக மாதந்தோறும் ஐயப்பன் கோயில் நடை திறக்கும். அதற்காக விரதமிருந்து இருமுடி கட்டி தமிழகம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூஜையில் கலந்துகொண்டு பதினெட்டுப்படி ஏறி விரதத்தை முடிப்பது வழக்கம்.
ஆனால் கொரானா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 14 முதல் 18ஆம் தேதி வரையிலான விளக்கு பூஜையில் பக்தர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து அவரவர் இல்லத்திற்கு அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி விரதத்தை முடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சபரிமலை தேவசம் போர்டின் அறிவிப்பையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி 18 படி ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் இந்த ஆண்டு கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக அங்கு தரிசனம் செய்ய முடியாத போதிலும் ராஜா அண்ணாமலைபுரத்தில் சிறப்பாக தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

Also see...
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading