• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்தது!

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்தது!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜெர்மனியில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேரும், பிரிட்டனில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து பிரான்ஸில் வைரஸ் தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 7 லட்சத்து 92 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவை தொடர்ந்து ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில். இத்தாலியில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இறப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜெர்மனியில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேரும், பிரிட்டனில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: