புதுச்சேரியில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று

கடுமையான கோவிட் -19 உடன் தொடர்புடைய நோய்களில் பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள் ஆண்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று  நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் (Nature Communications) வெளியிட்ட ஆய்வில் எழுதினர். கூடுதலாக, உலகளவில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதாச்சாரத்தில் உள்ள ஒற்றுமையை ஆசிரியர்கள், "மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் மிகவும் பொதுவானதாகக் கொமொர்பிடிட்டிகள் (comorbidities in hospitalised Covid-19 patients) காணப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், ஆரம்ப காலத்தில் 100 நோயாளிகள் எண்ணிக்கை தாண்ட 81 நாட்களாகியது. இதன்பின் அடுத்தசில நாட்களில் 300ஐ தொட்டு தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்  மட்டும் உச்சபட்சமாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் அரசு கொரோனா மருத்துவமனையில் 12 பேர், ஜிப்மரில் 46 பேர், மாகியில் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் புதிதாக தொற்று வந்த 58 பேரில் 25 பேர் ஏற்கனவே தொற்றுடையவர்களோடு தொடர்புடையவர்கள். 14 பேர்  மேட்டுப்பாளையம் முககவசம் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், அவர்களின் குடும்பத்தினர். எஞ்சிய 18 பேருக்கு தொற்று எப்படி வந்தது என ஆய்வு நடந்து வருகிறது.

அவர் மேலும் கூறும்போது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 173 பேர் கதிர்காமம் அரசு  மருத்துவமனையில் உள்ளனர். இவர்களில் பலருக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற எந்த அறிகுறிகளும்  இல்லை. இதனால் கொரோனா மருத்துவமனை வலுவை குறைக்கும் வகையில் நோயாளிகளை தனித்தனியே  பிரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி தனியார் மருத்துவக்கல்லூரியான அறுபடைவீடு, லட்சுமிநாராயணா ஆகியவற்றுக்கு தலா 50 பேரும், பல் மருத்துவக்கல்லூரிக்கு 25 பேரும் அனுப்பப்படுவர். அறிகுறி இல்லாமல்  உள்ளவர்களை கண்காணித்தால் போதும். அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை தரப்படும்.

ஊரடங்கில் ஓட்டல்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் பார்சல் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்றும் இதுகுறித்து ஆய்வு செய்ய உள்ளோம். இதன்பிறகு இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடக்கிறது.

மேலும் படிக்க...

உலகளவில் 93.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்த  கூட்டத்தில் ஊரடங்கின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததுபோல மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க  உள்ளோம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில் அவர்களின் உயிர்நலன் கருதி பல்வேறு  முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம். கிராமப்பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் வாகனங்களில் பரிசோதனை நடத்தவுள்ளோம். மாகி, ஏனாம், காரைக்காலில் வரும் 26, 27ம் தேதிகளில் பரிசோதனை நடத்தப்படும். மத்திய அரசு பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தும்படி அறிவுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் 441 பேருக்கு பரிசோதனை நடத்தியுள்ளோம் என அவர் கூறினார்.
Published by:Vaijayanthi S
First published: