நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில், 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.
சிகிச்சைக்குப் பிறகு 20,654 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 154 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நேற்றை காட்டிலும் கொரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிராவில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று ஒரே நாளில் 25,833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை அங்கு 1 லட்சத்து 66,000 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்த மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க... கொரோனா அதிகரிப்பு... தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ள மாநிலங்கள்...
இதனிடையே, நாளை முதல் மகாராஷ்டிரா உடனான பேருந்து போக்குவரத்தை முற்றிலுமாக ரத்து செய்து, மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்குடன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மால்கள் மற்றும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோன்று, சிக்கிம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.