உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது..!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது..!
கோப்பு படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஒநேர நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மூன்று ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிப்பால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 423 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பின் மையப்புள்ளியான சீனாவில், புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரங்களை ஒப்பிடும்போது வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. சீனாவில் இதுவரை 3,042 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்திருப்பது இத்தாலி. அங்கு 148 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரானில் கரோனாவால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 3 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் வாஷிங்டனில் 11 பேரும், கலிபோர்னியாவில் ஒருவரும் உயிரிந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் 225 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் மற்றம் நியூயார்க் நகரில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுக்காக சுமார் 61ஆயிரம் கோடி ரூபாய் செலவிட அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.தென் கொரியாவில் புதிதாக 518பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டள்ளது. இதன் மூலம் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,284ஆக உயர்ந்துள்ளது.  இஸ்லாமியர்களின் இரண்டு புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை கொரானா தொற்றில் இருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை சவூதி அரேபிய அரசு எடுத்து வருகிறது.

மக்காவில் உள்ள கபா ஆலயமும், மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் பள்ளிவாசலும் இரவுத் தொழுகைக்குப் பின்னர் மூடப்பட்டு மீண்டும் அதிகாலை தொழுகைக்காக மட்டுமே திறக்கப்படும் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த 2 பள்ளிவாசல்களிலும் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதைப் போன்று இரண்டு பள்ளிகளிலும் இருக்கும் ஸம்ஸம் நீர் வழங்கு மையங்களும் மூடப்பட்டுள்ளன.

உலக அளவில் இதுவரை 1,00,242 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,408ஆக அதிகரித்துள்ளது இந்நிலையில், அரசாங்கங்கள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம்,  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

 
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading