CoronaVirus | அதிர்ச்சி தகவல்... கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Youtube Video

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெருநகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களையும் இம்முறை விட்டுவைக்கவில்லை... ஏராளமான கிராம மக்கள் பெருந்தொற்றுக்கு தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்...

  • Share this:
    கொரோனா முதல் அலையை விட தமிழகத்தில் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. முதல் அலையில் கிராமப்புறங்களில் குறைந்த அளவிலான பாதிப்புகள் பதிவான சூழலில், இம்முறை கிராமங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நகரங்களில் இருப்பது போன்று பெரிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை வசதிகளின்றி தவிப்பதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலையில், நகரப் பகுதிகளுக்கு வந்து செல்வதால் தொற்று பரவுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் தொற்று பரவி வருவதையடுத்து, ஏராளமானோர் காய்ச்சல், சளி, உடல்வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக கிராமங்களில் சுகாதார முகாம் அமைத்து சோதனை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. கூட்டம் கூடுவதாலும், முகக்கவசத்தை பெரும்பாலும் தவிர்ப்பதுமே கிராமங்களில் கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



    திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    மேலும் படிக்க... Tamil Nadu Lockdown : தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: