சீனாவில் இருந்து கிருஷ்ணகிரி வந்த 11 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

சீனாவில் இருந்து கிருஷ்ணகிரி வந்த 11 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!
கொரோனா வைரஸ்
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த ஏராளமான மாணவர்கள் சீனாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் கடந்த நான்கு நாட்கள் முன்பு சீனாவில் இருந்து சொந்த ஊர் வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் மேலும் 11 மாணவர்கள் வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். வெளியே செல்லவோ உறவினர்கள் நண்பர்கள் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மருத்துவத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Also see:

First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்