ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Coronafighters.. ரியல் ஹீரோக்களுக்கு குவியும் பாராட்டுகள்!

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள நகரின் பல இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Coronafighters.. ரியல் ஹீரோக்களுக்கு குவியும் பாராட்டுகள்!
ரியல் ஹீரோக்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
  • Share this:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்களை காக்கப் போராடும் மருத்துவர்களுக்காக ட்விட்டரில் #Coronafighters என்ற ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 349 பேரும், ஈரானில் 129 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

Also read: நாய், பூனைகளிடம் இருந்து கொரோனா வந்ததா? சுகாதாரத் துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?


இதற்கிடையே, கொரானாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வடமேற்கு சீனாவில் பல மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முகமூடி அணிந்தவாறு பள்ளிகளுக்கு வந்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததற்கான காரணம் சீன மருத்துவர்கள் தான் என இணையத்தில் சீன மருத்துவர்களின் புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ட்விட்டரில் #Coronafighters என்ற ஹேஷ்டேக்கில் கொரோனாவிற்கு எதிராக மக்களை காக்க போராடும் மருத்துவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள நகரின் பல இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் விமானங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் ஊழியர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு கொரோனாவிற்கு எதிராக நம்மை காக்க போராடுபவர்கள் என ஷேர் செய்து வருகின்றனர்.


 

First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading