Home /News /coronavirus-latest-news /

சத்தம் போட்டு பேசினால் கொரோனா பரவுமா? விஞ்ஞானிகள் கூறும் தகவல்கள்

சத்தம் போட்டு பேசினால் கொரோனா பரவுமா? விஞ்ஞானிகள் கூறும் தகவல்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா பாதித்தவர் ஒரு நிமிடம் பேசினால், 1,000 உமிழ்நீர் திவலைகள் உருவாகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நீங்கள் சத்தம்போட்டு பேசுபவரா? உங்களால் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

பாலாஜி மோகன் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளியான படம், வாயை மூடி பேசவும். சிறிய நகரத்தில் வைரஸ் வேகமாக பரவ மக்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. ஒருவர் வாயைத் திறந்து பேசினாலே வைரஸ் பரவும் என்பதுபோல் அந்த படத்தின் கதை நகரும்.

கொரோனா வைரஸ் எந்தெந்த வழிகளில் பரவுகிறது என்பது குறித்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு, வாயை மூடி பேச வேண்டும் படத்தை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், மக்களை பேச வைத்து சோதனை செய்தனர். அதில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கொரோனா வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது, ஒரு சில நபர்கள் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்துகொண்டிருப்பதையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆகவே, இருமல், தும்மல் போலவே, சத்தமாக பேசுவதும் கூட, அதற்கு இணையாக வைரசை பரப்பும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள், சாதாரணமாக பேசுவதன் மூலமே கொரோனாவை பரப்பமுடியும் என்பதால், மாஸ்க் அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதனோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், மாஸ்க் அணிவது, கண்ணாடி அணிவது, கையுறை அணிவது ஆகிய வரிசையில் தற்போது சத்தம் போட்டு பேசுக்கூடாது என்பதும் இணைந்துள்ளது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி