மைக்ரோ திட்டம் உள்ளிட்ட களப்பணிகளின் மூலம் விரைவில் தொற்று கட்டுக்குள் வரும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

மைக்ரோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான களப்பணியின் மூலம் விரைவில் தொற்று கட்டுக்குள் வரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோ திட்டம் உள்ளிட்ட களப்பணிகளின் மூலம் விரைவில் தொற்று கட்டுக்குள் வரும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி
  • Share this:
சென்னை பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கத்தில்  அதிகாரிகளோடு மைக்ரோ திட்டம் குறித்து ஆய்வு செய்து, இப்பகுதியில் பணியில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பல்வேறு வகையான தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்; மைக்ரோ திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவர் நியமித்து உள்ளோம். அறிகுறி இருப்பவர்களை சோதனை செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அறிகுறி இல்லாதவர்களைத் தனிமைப்படுத்துவது போன்ற பல பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மடிப்பாக்கம் பகுதியில் தனிமைப்படுத்தப்படும் பகுதியில் அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் இல்லங்களுக்குச் சென்று 31 focus volunteers உதவிகளைச் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் அந்தப் பகுதியில் இருக்கும் தாக்கத்தின் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு 1 அல்லது 3 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


வீடு வீடாகச் சென்று அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறியும் பணி மூன்று மாதத்தைக் கடந்து வெற்றிகரமாக  நடந்து வருகிறது. தினமும் 11 லட்சம் வீடுகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 2.6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 56% சதவீதம் பேர் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்.

இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இவர்கள் மூலம் மேலும் பரவாமல் தடுக்க மைக்ரோ திட்டம் போன்று செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் காரணம்.

தொற்று அதிகளவில் பரவுவதையும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் இந்தத் திட்டம் உறுதுணையாக உள்ளது.2,75,869 பேர் நேற்று வரை தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்; 30,549 பேர் நேற்று மட்டும் தனிமைபடுத்துப்பட்டுள்ளனர். பெரிய அளவில் தனிமைப்படுத்தும் முறையை தற்போது பின்பற்றி வருகிறோம்.

Also see:

பச்சை மற்றும் காபி என இரண்டு வண்ணங்களில் வீடுகளில் தனிமைபடுத்தவதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டி வருகிறோம். 10 நாட்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 5,000 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இருமடங்காக உயர்ந்து ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை யாருக்கும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆசிரியர் சங்கம் வைத்துள்ள கோரிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையர், மாநகராட்சிப் பள்ளிகளில் 3,500 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுள் 1,000 பேர் தான் தற்போது தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களை இரு விதமான பணிகளில் தற்போது ஈடுபடுத்தி வருகிறோம்.

தொலைபேசி மூலமாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் அலுவல் பணியிலும், Focus volunteer-களைக் கண்காணிக்கவும்தான் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளை அவர்களாகவே முன்வந்து சேவை மனப்பான்மையுடன், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முழு ஊரடங்கை உணர்ந்து மக்கள் செயல்பட்டால் மட்டுமே இதிலிருந்து விரைந்து வெளிவர முடியும். கொரோனாவுக்கு இரு மருந்துகள் தான், ஒன்று முகக்கவசம், மற்றொன்று சமூக இடைவெளியைப் பின்பற்றுவது. பெரும்பாலோனர் முக்கவசம் அணியத் தொடங்கிவிட்டனர். 100% அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். ஆங்காங்கே கூட்டமாக கூடி சமூக இடைவெளியைப் பின்பற்றாத ஒரு சூழல் உள்ளது. இதனைத் தவிர்த்து அறிவுரைகளை முறையாகப் பின்பற்றினால் மற்ற நகரங்களுக்கும் நாம் முன்னோடியாக இருக்கலாம்.

Focus volunteer பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையையும் மாநகாரட்சி சார்பில் செய்து தரப்படுகிறது. அவர்களுக்கு மாதத்திற்கு 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மைக்ரோ திட்டம் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தொற்று கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading