கொரோனா பற்றி சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி

கொரோனாவை எதிர்த்துப் போராட சார்க் நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

    கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகள் வரவேற்றுள்ளன.

    இத்தகைய இக்கட்டான தருணத்தில் இணைந்து செயல்படுவது அவசியம் என பூடான் கூறியுள்ளது.

    இந்த சார்க் நாடுகளின் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது.எனவே  பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று இந்த நாடுகளின்  தலைவர்கள் காணொலியில்  இன்று  மாலை ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று கொரோனா குறித்து ஆலோசிக்க உள்ளது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vaijayanthi S
    First published: