உ.பி. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை உலகச் சுகாதார அமைப்பு பாராட்டுகிறது: யோகி அரசுக்கு ராஜ்நாத் சிங் புகழாரம்

ராஜ்நாத் சிங்

உத்தர பிரதேச அரசு வீடு வீடாக கொரோனா பாதித்தோரை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  உ.பி.அரசு வீடு வீடாக கொரோனா பாதித்தோரை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாட்டை பாராட்டியுள்ளார்.

  ராணுவ ஆராய்ச்சி மையம் லக்னோவில் 500 படுக்கைகளுடன் அமைத்துள்ள கொரோனா மருத்துவமனை மற்றும் வாரணாசியில் 750 படுக்கைகளுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ள மருத்துவமனை ஆகியவற்றுக்க்காக பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்நன்றி தெரிவித்தார்.

  லக்னோவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 255 படுக்கை வசதிகளுடன் கொரோனா மருத்துவமனையை கட்டியுள்ளது.இந்த மருத்துவமனையை ராணுவ அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

  உத்தர பிரதேச அரசு வீடு வீடாக கொரோனா பாதித்தோரை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

  கொரோனா சவாலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. வேலை செய்யும்போது தவறு நேர்வது இயல்பு. ஆனால் அதை குறை கூறுவது இந்த சூழலுக்கு ஏற்றதாகாது.ஏதாவது தவறு குறைகளை கண்டறிந்தால் அது குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கலாம்.

  குறைகளை களைவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். உலக நாடுகள் இந்தியாவுக்கு தாராளமாக உதவி வருகின்றன. உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண பிரதமர் மோடி எடுத்த முயற்சிதான் இதற்கு காரணம், இவ்வாறு அவர் பேசினார்.

  இதற்கிடையே கங்கை நதியில் உடல்கள் மிதந்த விவகாரத்தில் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மேலும் கங்கையில் உடல்களை விடுவதற்கு தடையும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையே இந்தியாவில் பரவும் கோவிட்-19 வைரஸ் வகை மொத்தம் 44 நாடுகளில் இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இதில் பிரிட்டனில் அதிகம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: